Today's prayer..

 Praise the Lord



வார்த்தையின் நாயகனே எம் இறைவா உம் வார்த்தைகள் உயிருள்ளது மட்டுமல்ல, வல்லமை நிறைந்ததுமாய் கூடஇருக்கிறது. உன்னுடைய பிள்ளைகளின் இதயம் கடினப்பட்டு சூழ்நிலைகளின் காரணமாகவோ,  இறைவார்த்தையை விட்டோ, உம் அன்பில் இருந்து விலகியோ வாழ்ந்து கடினப்பட்டு போயிருந்தால் தீயைப் போன்ற வார்த்தைகளால் அவர்கள் மனதை உருக்கும். பாதையை நொறுக்கும் சம்மட்டி போன்று உள்ளம் உடைந்து நொறுக்கப்படட்டும், மறுரூபம் ஆக்கப்படட்டும். யாரெல்லாம் இன்று இந்த இறைவார்த்தையை படிக்கிறார்களோ அவர்கள் உள்ளம் உருகட்டும், மாறட்டும் ஆண்டவரே!. குடும்பங்களுக்காக ஜெபிக்கிறோம், பிள்ளைகளுக்காக ஜெபிக்கிறோம், முதியவர்களுக்காக ஜெபிக்கிறோம், உற்றார் உறவுகளுக்காக ஜெபிக்கிறோம், நோயாளிகளுக்காக ஜெபிக்கிறோம். அப்பா இவர்கள் வாழ்க்கையில் இறை வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து படிக்கவும், வார்த்தையை மையமாக கொண்டு வாழவும் வேண்டி மன்றாடுகிறோம் . ஆமென்.



Word of God, your words not only have lives but have full of strength to all those who receive, accept and begin to live according to thy words. Dear Lord let your words be like a fire to melt the hearts of Your children who has hard heartened to thy words and to thy love or went away from thy words . Let your words make their paths straight towards thy values. Those who read your words today let their hearts be melted and changed to that of yours. We pray for the families and children, elderly people, relatives and near and dear ones and pray for all the sick and sufferings that they may understand and read your words with true meaning and live their lives according to the values your words teaches and speaks to us. We make this prayer through Christ our Lord. Amen

God bless you