Today's prayer..

 Praise the Lord



வாழ்வளிக்கும் வார்த்தையின் நாயகனே எம் இறைவா, உன் வார்த்தைகளால் வசனங்களால் எங்களுக்கு சந்தோஷத்தையும், நம்பிக்கையையும் கொடுத்து தேற்றி வருவதற்காக நன்றி அப்பா. எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள். கேளுங்கள்: அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்து கொள்வேன்: தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன். அப்பா எங்களின் செவிகள் திறக்கப்பட்டு, உன்னுடைய வார்த்தைகளை கேட்கவும், கேட்டு தியானிக்கவும், நாங்கள் தியானிக்கும் போது எங்களின் விசுவாசத்திலும், நம்பிக்கையிலும், அன்பிலும் வளரும் வரம் தாரும். எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பெயரால் ஜெபிக்கிறோம், எங்கள் ஜெபம் கேளும் நல்ல பிதாவே. ஆமென்.




Life giving word of my Lord, we thank you for giving us life, happiness and consolation through your loving and powerful words. Lord our God you have told us and taught us  ,come to me, give heed to me  then you will have life. I will make a covenant with you: i will show you the same love that i showed to david. God of our life let our ears be open to thy words, le us receive it and meditate and live it in our daily life. By living your word we may grow daily in faith, hope and love. We make this prayer through Christ our Lord. 🙏

God bless you