Todays prayer

 Praise the Lord


எங்களை முழுமையாய் அறிந்து காக்கின்ற நல்ல தெய்வமே உமக்கு நன்றி செலுத்துகிறோம். வாழ்க்கையிலே துர் செய்திகளை கேட்டு கேட்டு சோர்ந்து போய் இருக்கிற உம் பிள்ளைகளாகிய எங்களுக்கு நற்செய்தியை கொடுக்கப் போவதற்காக நன்றி அப்பா. அப்பா உம் வார்த்தைகள் சொல்லுகிறது தொலைவிலிருந்து வரும் நற்செய்தி வறண்ட தொண்டைக்கு கிடைக்கும் குளிர்ந்த நீரை போல் இருக்கும் என்று. உம்முடைய பிள்ளைகள் துன்பப்பட்டு, துயரப்பட்டு, வெட்கப்பட்டு , வேதனையோடு இருக்கிற காரியங்களில் நற்செய்தி வரட்டும் ஆண்டவரே!. எத்தனையோ காரியங்களுக்காக ஜெபித்து காத்துக் கொண்டிருக்கிற பிள்ளைகளுக்கு நற்செய்தியை கொடுக்க போவதற்காக நன்றி அப்பா. இதோ இந்த சிறுசிறு இறை சிந்தனைகள் வழியாக உன் பிள்ளைகளுக்கு நற்செய்தி கொடுத்து பூரிப்படைய செய்ய போவதற்காக நன்றி அப்பா. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நற்செய்தியை தங்கள் நண்பர்கள், உற்றார், உறவுகள் எல்லாருக்கும் பகிர்கின்ற உன் பிள்ளைகளை ஆணி துளைத்த கரத்தால் தொட்டு ஆசிர்வதியும். ஆமென்.



Lord God we thank you for knowing us personally and protecting us always from all kinds of dangerous. In our today's lives we always hear only bad and painful messages but today you have come to give us good News so we thank you Lord. Father your words tell us that the good news which comes from far is like the water which qunches the thirst of the drying throat. Lord God let your word come to your children when they are in pain, in sadness, when they are ashamed and rejected. Lord you are going to give good news to all those who wait on you, we thank you for this. We thank you for helping your children through the small reflections and inspiration on your words. Above all Lord we ask you to bless with your wounds hands all those who share your message to their friends and relatives.Amen

God bless you