Praise The Lord
இரக்கத்தின் ஊற்றே எம் இறைவா, ஆண்டவராகிய நானே அதன் பாதுகாவலர்: இடையறாது அதற்கு நான் நீர் பாய்ச்சுகின்றேன்: எவரும் அதற்குத் தீங்கு விளைவிக்காதவாறு இரவும் பகலும் அதற்குக் காவலாய் இருக்கின்றேன். என்று உம் வார்த்தைகள் சொல்லுகிறது. ஆண்டவரே என்னை யார் காப்பாற்றுவார், என்னை யார் பாதுகாப்பார், என்னை யார் வழிநடத்துவார் என்று கலங்கி நிற்கின்ற உம் பிள்ளைகளை காப்பாற்றுகின்ற தெய்வமாக நீர் இருக்கின்றீர். அப்பா இன்றைய காலகட்டத்தில் கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன், தாயை இழந்த பிள்ளைகள், தகப்பனை இழந்த பிள்ளைகள் ,பிள்ளைகளை இழந்த பெற்றோர் மற்றும் பல்வேறு உறவுகளை இழந்து தவிக்கின்ற உம் பிள்ளைகளை அவர்கள் குடும்பத்தை , வாழ்க்கையை நீர் தாமே பாதுகாக்க வேண்டும்.இடையறாது இவர்களின் குடும்பத்திற்கும் இவர்களின் வாழ்க்கைக்கும் நீர்பாய்ச்சி எவரும் , எதுவும் அவர்களுக்கு தீங்கு விளைவிக்காதவாறு இரவும் பகலும் காவலாய் இருக்க வேண்டி எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பெயரால் ஜெபிக்கிறோம், எங்கள் ஜெபம் கேளும் நல்ல பிதாவே ஆமென் .
Fountain of mercy, my God, your words speaks to us like this "I am the God who protects, I water it, I preserve and protect night and day so that no one can destroy and do any evil action about it". We feel these words of your presence and closeness in our lives too dear God. lord we thank you for being a God of protecter and God of our savior to all those Who feel and cry out, Who will save me lord? , who will protect me ?and who will lead me? . Father at this present momentary situation we ask you to bless ,protect and be with all those wifives who lost their husbands, husbands who lost their wifives, children who lost their parents, parents who lost their children, children who lost their mothers and children who lost their fathers, and all those people who became orphan due to this covid-19. Dear Lord we ask you to continue to bless these people with spirings of graces and blessings, and protect them from all kinds of dangerous. We make this prayer through Christ our Lord. Amen. 🙏
God bless you