Todays Thought in English and Tamil

 Praise The Lord




இரக்கத்தின் ஊற்றே எம் இறைவா யோவான் நற்செய்தி ஐந்தாம் அதிகாரம் 6,7 இறை வார்த்தைகளில் இவ்வாறாக வாசிக்கின்றோம். "இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, நலம்பெற விரும்புகிறீரா? என்று அவரிடம் கேட்டார். ஐயா, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார் என்று உடல் நலமற்றவர் அவரிடம் கூறினார். நெடுங்காலமாக உடல்நலம் மற்று இருந்த ஒருவர், அவர் கண் முன்பாகவே தனக்கான ஆசிர்வாதம் இருந்தும் அவரால் அடைய முடியாத போது அவர் அருகில் சென்று நலம்பெற உதவினீரே! , இன்று எங்கள் வாழ்க்கையிலே எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லையே என்று ஏக்கத்தோடும் ,கண்ணீரோடும் ஜெபிக்கின்ற உம்  பிள்ளைகளாகிய எங்கள் அருகில் வந்து, எங்களுக்கான ஆசீர்வாதத்தை கொடுத்தருளும் சுவாமி. ஆமென்.




God of mercy We read in the gospel of St.john 5:6-7 "When Jesus saw him lying there and knew that he had been there a long time, he said to him, Do you want to be made well? The sick man answered him, Sir, I have no one to put me into the pool when the water is stirred up; and while I am making my way, someone else steps down ahead of me." there was a man who was lying there near the pool for a long time with a Deep desire to get in to the water but there was no to help him out but you  dear Jesus came to his help and blessed him with the blessings of good health.Today we ask you to bless and help all those of your children crying out in prayer for help and all those who feel that they have no one to help them out.Dear Lord come near us and bless us with all the blessings that We are in need of. Amen


God Bless You